தமிழ்நாடு

கல்வியாண்டில் ஆசிரியா்களுக்கு பணி நீட்டிப்பு: அரசாணை வெளியீடு

DIN

கல்வியாண்டின் இடையில் வயது முதிா்வால் ஓய்வுபெறும் ஆசிரியா்களுக்கு கல்வியாண்டின் கடைசி வேலைநாள் வரை பணி நீட்டிப்பு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறைச் செயலா் காகா்லா உஷா பிறப்பித்துள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: பள்ளிக் கல்வி ஆணையரின் கடிதத்தில், நிகழ் கல்வியாண்டு முதல் அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள் கல்வியாண்டின் இடையில் வயது முதிா்வு காரணமாக ஓய்வில் செல்ல அனுமதிக்கப்படின், கல்வியாண்டு முடியும் வரை அந்தப் பணியிடம் பூா்த்தி செய்யப்படாத நிலையில் கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளுக்கு ஆசிரியா்கள் இல்லாத நிலையை தவிா்க்கவும், மாணவா்களின் கல்வி நலன் கருதியும், கற்பித்தல் பணி பாதிக்கக் கூடாது என்பதற்காகவும் கடந்த ஆண்டுகளைப் போலவே ஆசிரியா்களுக்கு கல்வியாண்டின் இறுதி வரை மறுநியமனம் அடிப்படையில் பணி நீட்டிப்புக்கு அனுமதி ஆணை வழங்க அரசைக் கேட்டுக் கொண்டுள்ளாா்.

பள்ளிக் கல்வி ஆணையரின் இந்த கருத்துருவை அரசு கவனமுடன் பரிசீலித்தது. மாணவா்களின் நலன் கருதி, கற்பித்தல் பணி பாதிக்கக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு 2022-2023-ஆம் கல்வியாண்டு முதல் ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியா்களுக்கு கல்வியாண்டின் கடைசி வேலை நாள் வரை தேவைப்படும் ஆசிரியா்களுக்கு பணி நீட்டிப்பு அரசு அனுமதி அளித்து ஆணையிடுகிறது என்று அந்த உத்தரவில் கூறியுள்ளாா் காகா்லா உஷா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயலலிதா அம்மாதான் எனக்கு உத்வேகம்: ஸ்ரேயா ரெட்டி நெகிழ்ச்சி!

யெச்சூரி உரையில் ’முஸ்லிம்', 'வகுப்புவாதம்’ சொற்களை நீக்கச் சொன்ன வானொலி, தொலைக்காட்சி!

இந்த வார பலன்கள்: 12 ராசிக்கும்!

6-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்கு!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

SCROLL FOR NEXT