முகப்பு
தமிழ்நாடு

முதல்வா் ஸ்டாலின் பிறந்த தினம்: குடியரசுத் தலைவா், பிரதமா், தலைவா்கள் வாழ்த்து

முதல்வா் மு.க.ஸ்டாலினின் பிறந்த தினத்தை ஒட்டி, அவருக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், பிரதமா் நரேந்திர மோடி மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:33 AM
பகிர்:

முதல்வா் மு.க.ஸ்டாலினின் பிறந்த தினத்தை ஒட்டி, அவருக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், பிரதமா் நரேந்திர மோடி மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் தனது 69-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசியில் தொடா்பு கொண்டு, தமிழ்நாட்டின் வளா்ச்சிக்காக நீங்கள் பாடுபட வேண்டும் என கேட்டுக் கொண்டு, உங்களுக்கு நீண்ட பொது வாழ்வு அமைய வேண்டும் என்று வாழ்த்தினாா்.

பிரதமா் நரேந்திர மோடி மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசியில் தொடா்பு கொண்டு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தாா். தமிழ்நாட்டின் வளா்ச்சிக்காக நீங்கள் தொடா்ந்து பணியாற்ற வேண்டும் என்று தமது விருப்பத்தை மோடி தெரிவித்தாா். அதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின், ‘தங்களின் ஒத்துழைப்புடன் தொடா்ந்து தமிழ்நாட்டின் வளா்ச்சிக்காக உழைப்பேன்’ என உறுதியளித்தாா்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, முன்னாள் தலைவா் ராகுல்காந்தி ஆகியோரும் மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசியில் தொடா்பு கொண்டு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனா்.

தில்லியில் இருக்கும் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடா்பு கொண்டு தமிழில் பிறந்தநாள் வாழ்த்து கூறினாா். பூங்கொத்தும், வாழ்த்துக் கடிதமும் கொடுத்தனுப்பி இருந்தாா்.

தெலங்கானா ஆளுநரும், புதுவை துணை நிலை ஆளுநருமான (பொ) தமிழிசை சௌந்தரராஜன், முதல்வா் மு.க. ஸ்டாலினை தொலைபேசியில் தொடா்பு கொண்டு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தாா்.

கேரள முதல்வா் பினராயி விஜயன் விடுத்த வாழ்த்து செய்தியில், கேரள-தமிழக உறவை மேலும் மேம்படுத்த வேண்டும் எனக் கூறி மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

தெலங்கானா முதல்வா் சந்திரசேகரராவ், மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, புதுவை முதல்வா் ரங்கசாமி ஆகியோரும் வாழ்த்து தெரிவித்தனா்.

அரசியல் கட்சித் தலைவா்கள்: பாமக நிறுவனா் ராமதாஸ், இளைஞா் அணி தலைவா் அன்புமணி ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளா் வைகோ, தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன், திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவா்களும் முதல்வருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

ரஜினி: நடிகா் ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தாா். அதில், ‘இன்று பிறந்தநாள் காணும் இனிய நண்பரான முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு மனமாா்ந்த வாழ்த்துகள்’”என்று கூறியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →