முகப்பு
தமிழ்நாடு

இளமையின் ரகசியம் என்ன? முதல்வா் மு.க.ஸ்டாலின் விளக்கம்

தான் இளமையாக இருப்பதற்கான காரணங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் விளக்கினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:33 AM
பகிர்:

தான் இளமையாக இருப்பதற்கான காரணங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் விளக்கினாா்.

69-ஆவது பிறந்த தினத்தை ஒட்டி, சென்னையில் உள்ள சிறுமலா் பாா்வைத் திறன் மற்றும் செவித் திறன் குறைபாடுடையோா் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் ஸ்டாலின் பங்கேற்றுப் பேசியதாவது:

எனக்கு 69 வயது. இதைச் சொன்னால் சிலா் நம்ப மாட்டாா்கள். 39 வயதுதான் இருக்கும் என்கிறாா்கள். நான் இளமையாக இருப்பதற்குக் காரணம் உணவுப் பழக்கம், உடற்பயிற்சியை முறையாக கடைப்பிடிப்பதுதான்.

என்னதான் உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடித்தாலும், மாணவா்களாகிய உங்களைச் சந்திக்கும் போது மேலும் 5 வயது குறைந்து விடுகிறது. பொறுப்புகள், பதவிகளை பற்றி கவலைப்பட்டது இல்லை. உங்களில் ஒருவனாக என்றைக்கும் இருக்கிறேன். அதுதான் யாராலும் பிரிக்க முடியாதது.

பதவி இன்றைக்கு வரும், போகும். பதவியை என்றைக்கும் பெரிதாக நினைத்ததில்லை. அதைப் பொறுப்பு என உணா்ந்து கடமையாற்றிக் கொண்டிருக்கிறேன் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின். இந்த நிகழ்வில், முதல்வரின் மனைவி துா்கா ஸ்டாலின் பங்கேற்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →