தமிழ்நாடு

சிவராத்திரி: ஸ்ரீவில்லிபுத்தூரில் கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுட்டு அசத்திய மூதாட்டி!

DIN

ஸ்ரீவில்லிபுத்தூரில் சிவராத்திரியை முன்னிட்டு 85 வயது மூதாட்டி கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுட்டு அசத்தினார். 

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் முதலியார் பட்டித் தெருவில்  பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 100 ஆண்டுகளாக சிவராத்திரி அன்று நள்ளிரவில் வெறும் கையினால் கொதிக்கும் நெய்யில் அப்பம் சுடும்  நிகழ்ச்சி நடைபெற்று வருவது வழக்கம்.

இந்த ஆண்டு மகா சிவராத்திரியை முன்னிட்டு கோவில் வளாகத்தின் அருகே உள்ள பகுதியில் வசிக்கும் முத்தம்மாள் என்ற 85 வயது மூதாட்டி மற்றும் கோவில் பூசாரிகள் எரியும் விறகு அடுப்பில் சட்டியில் நெய்யை கொதிக்கவிட்டு அதில் வெல்லம் கலந்த அரிசி மாவினால் செய்யப்பட்ட  அப்பங்களை கொதிக்கும் நெய்யில் போட்டு கரண்டியை பயன்படுத்தாமல் வெறும் கையால் அப்பத்தை எடுத்து, சுற்றி நின்றிருந்த ஏராளமான பக்தர்களை ஆச்சரியப்பட வைத்தனர்.  

மேலும் கொதிக்கும் நெய்யை எடுத்து இக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நெற்றியில் பூசி விட்டு அப்பத்தை பிரசாதமாக வழங்கினர். 

இந்நிகழ்ச்சியை நள்ளிரவு நேரத்திலும் ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் கண்டு களித்தனர். மகாசிவராத்திரி அன்று முத்தம்மாள் என்ற மூதாட்டி கடந்த 48 ஆண்டுகளாக அப்பம் சுட்டு வருகிறார். இதற்காக  40 நாள்களாக  விரதம் இருந்து அப்பம் சுடுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மலையாள இயக்குநர் சங்கீத் சிவன் காலமானார்

தொடரும் ஏர் இந்தியா- விமான பணியாளர்கள் பிரச்னை: பயணிகளுக்குத் தீர்வு என்ன?

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT