உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு ஆறுமுகசாமி ஆணையம் மீண்டும் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையைத் தொடங்கவுள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, ஜெயலலிதா சம்மந்தப்பட்டவர்கள் அனைவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவடையாததால் ஆணையத்தின் பதவிக் காலமும் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, விசாரணைக்குத் தடை கோரி ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்போலோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்ததால் ஆறுமுகசாமி ஆணையத்தில் விசாரணை நடைபெறவில்லை.
இந்த வழக்கில், ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவும் வகையில், எய்ம்ஸ் இயக்குநா் நிகல் டாண்டன் தலைமையில் மருத்துவக்குழு அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, மருத்துவக்குழுவும் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அடுத்த கட்ட விசாரணை வருகிற மார்ச் 7 ஆம் தேதி மீண்டும் தொடங்கவுள்ளது. மார்ச் 7, 8 தேதிகளில் குறுக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு அப்போலோ மருத்துவமனை மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவ மருத்துவக் குழு உச்சநீதிமன்றம் உத்தரவு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.