நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த ஆபத்சகாயேஸ்வரர். 
தமிழ்நாடு

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில் மகா சிவராத்திரி விழா

நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் வலங்கைமான் வட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில் மகா சிவராத்திரி விழா அதிவிமரிசையாக  நடைபெற்றது.

DIN

நீடாமங்கலம்: நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் வலங்கைமான் வட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில் மகா சிவராத்திரி விழா அதிவிமரிசையாக  நடைபெற்றது.

இதனைமுன்னிட்டு கோயிலில் ஏலவார்குழலிஅம்மன் சமேத ஆபத்சகாயேஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.

நான்கு கால பூஜைகளிலும் ஆபத்சகாயேஸ்வரருக்கு சிறப்பு ஆபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டது.

நீடாமங்கலம் காசிவிசுவநாதர்.

கோவில் அர்ச்சகர்கள் சுவாமிநாத சிவாச்சாரியார், ஞானஸ்கந்தன் சிவாசாசாரியார் ஆகியோர் வேதமந்திரங்களைச் சொல்லி நான்கு கால பூஜைகளை நடத்தி வைத்தனர். தேவார பாடல்கள் பாடப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் நீடாமங்கலம் விசாலாட்சி சமேத காசிவிசுவநாதர் கோயிலில் மகாசிவராத்திரியை முன்னிட்டு நான்கு கால பூஜைகள் நடந்தது. இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

நீடாமங்கலம் காசிவிசுவநாதர் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த விசாலாட்சி அம்மன்.

திருநாவுக்கரசரால் தேவார பாடல் பாடப்பெற்ற நீடாமங்கலம் வட்டம் பூவனூர் கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி சமேத சதுரங்க வல்லபநாதர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் மகாசிவராத்திரிவிழா அதிவிமரிசையாக நடைபெற்றது.

நான்கு கால பூஜைகளிலும் சதுரங்க வல்லபநாதருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. 

இதிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாருங்கள்...

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

2-ஆவது இன்னிங்ஸில் 400 ரன்களை நூலிழையில் தவறவிட்ட இந்தியா: அபார முன்னிலை!

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

ஓணக் களிப்பில்... மோக்‌ஷா!

SCROLL FOR NEXT