தமிழ்நாடு

சென்னை மேயராக ஆர். பிரியா பதவியேற்பு; செங்கோலை வழங்கிய அமைச்சர்கள்!

சென்னை மாநகராட்சி மேயராக பொறுப்பேற்றுள்ள ஆர். பிரியாவுக்கு அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன் மற்றும் சேகர்பாபு ஆகியோர் செங்கோலை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். 

DIN

சென்னை மாநகராட்சி மேயராக பொறுப்பேற்றுள்ள ஆர். பிரியாவுக்கு அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன் மற்றும் சேகர்பாபு ஆகியோர் செங்கோலை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். 

தொடர்ந்து, சென்னை மாநகர ஆணையர் ககன்தீப் சிங் பேடியும் சென்னை மேயரான பிரியாவுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். 

தமிழகத்தில் மாநகராட்சி மேயர், துணை மேயர், நகர்மன்றத் தலைவர், பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. 

சென்னை மாநகராட்சியைப் பொருத்தவரையில் திமுக மேயர் வேட்பாளராக ஆர்.பிரியா அறிவிக்கப்பட்டு இருந்தார். சென்னை ரிப்பன் மாளிகையில் மாநகர ஆணையர் ககன்தீப் சிங் பேடியிடம் ஆர்.பிரியா  இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் சென்னை மேயராக ஆர். பிரியா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

இதையடுத்து அவருக்கு சென்னை மாநகர ஆணையர் ககன்தீப் சிங் பேடி பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். இதையடுத்து பிரியாவுக்கு ஆணையர் வாழ்த்துத் தெரிவித்து மேயருக்கான அங்கியையும் சங்கிலியையும் வழங்கினார். இதன் மூலமாக மிகவும் இளம்வயது மேயர், சென்னையின் முதல் பட்டியலின பெண் மேயர் என்ற பெருமையை பெற்றுள்ளார் பிரியா. 

அதன்பின்னர் சென்னை மேயர் இருக்கையில் பிரியாவை அமரவைத்து அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன் மற்றும் சேகர்பாபு ஆகியோர் செங்கோலை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT