முகப்பு
தமிழ்நாடு

தூத்துக்குடி மேயராக ஜெகன் பெரியசாமி பதவியேற்பு

தூத்துக்குடி மாநகராட்சி மேயராக திமுக பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி பதவியேற்றார். 

தமிழ்நாடு

தூத்துக்குடி மேயராக ஜெகன் பெரியசாமி பதவியேற்பு

தூத்துக்குடி மாநகராட்சி மேயராக திமுக பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி பதவியேற்றார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

தூத்துக்குடி மாநகராட்சி மேயராக திமுக பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி பதவியேற்றார். 

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிட திமுக சார்பில் அக்கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீயிடம் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். வேறு யாரும் போட்டியிடாததால் ஜெகன் பெரியசாமி போட்டியின்றி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் மற்றும் ஒட்டப்பிடாரம் சட்டப்பேரவை உறுப்பினர் சண்முகையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது மேயருக்கான அங்கி, ஜெகன் பெலியசாமிக்கு அணிவிக்கப்பட்டு அவருக்கு 111 பவுன் தங்கச் செயின் மற்றும் வெள்ளி செங்கோலை மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ வழங்கினார்.

முழு கட்டுரையைப் படிக்க →