தமிழ்நாடு

எடப்பாடி நகர மன்ற தலைவராக திமுக உறுப்பினர் டி.எம்.எஸ்.பாஷா தேர்வு

DIN


எடப்பாடி: எடப்பாடி நகராட்சிக்கான நகரமன்ற தலைவர் தேர்வு இன்று நடைபெற உள்ள நிலையில், நகரமன்ற தலைவர் பதவியில் முன்னுரிமை வேண்டி ஒரு பிரிவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

எடப்பாடி நகராட்சி கடந்த 1965ல் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாரிமுத்து பக்தர் தொடர்ந்து மூன்று முறையும் அவரைத் தொடர்ந்து அவரது மகன் இருசப்ப மேத்தா மூன்று முறையும் காங்கிரஸ் கட்சியில் வெற்றி பெற்று நகர மன்ற தலைவராக பொறுப்பு வகித்தனர். 

இதனைத்தொடர்ந்து 2011-இல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட டி.கதிரேசன் வெற்றி பெற்று நகர மன்ற தலைவராக பொறுப்பு வகித்தார். தொடர்ந்து 7வது முறையாக வெற்றி பெற்ற நகர மன்றத் தலைவர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் (மீனவர்). எனவே தற்போது திமுக- 16, அதிமுக-13, காங்கிரஸ் - 1 உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில்,  ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்த நகர மன்ற உறுப்பினருக்கு நகர மன்றத் தலைவர் பொறுப்பு வழங்கிடகோரி அச்சமூகத்தைச் சார்ந்த திரளானோர் இன்று (வெள்ளிகிழமை) திமுக நகர செயலாளர் டி.எம்.எஸ்.பாஷா வீட்டினை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவலர்கள் அப்புறப்படுத்தி சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து எடப்பாடி நகராட்சியில் தேர்தல் நடத்தும் அலுவலர் பலர் முன்னிலையில் நடைபெற்ற நகரமன்ற தலைவருக்கான தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட டி.எம்.எஸ்.பாஷா  17 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக உறுப்பினர் ஏ.எம்.முருகன் 13 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

நகர மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்ட டி.எம்.எஸ்.பாஷா  எடப்பாடி நகர செயலாளராக பொறுப்பு வகித்து வருவது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT