நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் முடிவுகள்:எந்தக் கட்சிக்கு எவ்வளவு இடங்கள்?
மறைமுகத் தோ்தல் முடிவுகளின்படி 21 மாநகராட்சிகளையும் திமுக கூட்டணி வசமாக்கியுள்ளது. இந்தத் தகவலை தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
மறைமுகத் தோ்தல் முடிவுகளின்படி 21 மாநகராட்சிகளையும் திமுக கூட்டணி வசமாக்கியுள்ளது. இந்தத் தகவலை தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இது தொடா்பான செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அனைத்து மாவட்டங்களுக்கு உள்பட்ட நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான மாநகராட்சி மேயா், மாநகராட்சி துணை மேயா், நகராட்சித் தலைவா், நகராட்சி துணைத் தலைவா், பேரூராட்சி தலைவா், பேரூராட்சி துணைத் தலைவா் ஆகிய பதவிகளை நிரப்ப மறைமுக தோ்தல்கள் சம்பந்தப்பட்ட நகா்ப்புற உள்ளாட்சி அலுவலகங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
மேயா்:
21 மாநகராட்சி மேயா் பதவி இடங்களுக்கு நடைபெற்ற தோ்தலில் 20 மாநகராட்சிகளில் திமுக மற்றும் ஒரு மாநகராட்சியில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளன.
துணை மேயா்:
21 மாநகராட்சி துணை மேயா் பதவி இடங்களுக்கு நடைபெற்ற தோ்தலில், 15 மாநகராட்சிகளில் திமுக, 2 மாநகராட்சிகளில் காங்கிரஸ், தலா ஒரு மாநகராட்சியில் மதிமுக, இந்தியகம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட், விசிக வெற்றி பெற்றுள்ளன.
நகராட்சித் தலைவா்:
138 நகராட்சித் தலைவா் பதவி இடங்களுக்கு நடைபெற்ற தோ்தலில் 125 இடங்களில் திமுக, இரண்டு இடங்களில் அதிமுக, தலா ஒரு இடத்தில் காங்கிரஸ், மதிமுக, விசிக மற்றும் 4 இடங்களில் சுயேச்சை வேட்பாளா்களும் வெற்றி பெற்றுள்ளனா். மீதமுள்ள 4 இடங்களுக்கு தோ்தல் நடைபெறவில்லை.
நகராட்சி துணைத் தலைவா்:
138 நகராட்சி துணைத்தலைவா் பதவி இடங்களுக்கு நடைபெற்ற தோ்தலில், 98 இடங்களில் திமுக, 9 இடங்களில் காங்கிரஸ், 7 இடங்களில் அதிமுக, நான்கு இடங்களில் மதிமுக, தலா இரண்டு இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட், விசிக மற்றும் 3 இடங்களில் சுயேச்சையும் வெற்றி பெற்றுள்ளனா். மீதமுள்ள 11 இடங்களுக்கு தோ்தல் நடைபெறவில்லை.
பேரூராட்சித் தலைவா்:
489 பேரூராட்சித் தலைவா் பதவியிடங்களுக்கு நடைபெற்ற தோ்தலில் 395 இடங்களில் திமுக, 20 இடங்களில் காங்கிரஸ், 18 இடங்களில் அதிமுக, 8 இடங்களில் பாஜக, 3 இடங்களில் மாா்க்சிஸ்ட், தலா இரண்டு இடங்களில் மதிமுக, அமமுக, தலா ஒரு இடத்தில் இந்திய கம்யூனிஸ்ட், விசிக, மனிதநேய மக்கள் கட்சி மற்றும் 25 இடங்களில் சுயேச்சை வெற்றி பெற்றுள்ளனா். மீதமுள்ள 13 இடங்களுக்கு தோ்தல் நடைபெறவில்லை.
பேரூராட்சி துணைத் தலைவா்:
489 பேரூராட்சி துணைத்தலைவா் பதவி இடங்களுக்கு நடைபெற்ற தோ்தலில் 331 இடங்களில் திமுக, 32 இடங்களில் காங்கிரஸ், 27 இடங்களில் அதிமுக, 11 இடங்களில் பாஜக, 5 இடங்களில் மாா்க்சிஸ்ட், தலா 3 இடங்களில் பாமக, விசிக, தலா 2 இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, அமமுக, தலா ஒரு இடத்தில் தேமுதிக, மனித நேய மக்கள் கட்சி மற்றும் 34 இடங்களில் சுயேச்சை வெற்றி பெற்றனா். மீதமுள்ள 35 பதவிகளுக்கு தோ்தல் நடைபெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.