முகப்பு
பொம்மிடியில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்
தமிழ்நாடு

பொ.மல்லாபுரம் பேரூராட்சி திமுக கூட்டணி வேட்பாளர் தோல்வி: விசிக சாலை மறியல்

பொ.மல்லாபுரம் பேரூராட்சியின் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட திமுக கூட்டணி வேட்பாளர் தோல்வி அடைந்ததை அடுத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பொம்மிடியில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்
பகிர்:

பொ.மல்லாபுரம் பேரூராட்சியின் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட திமுக கூட்டணி வேட்பாளர் தோல்வி அடைந்ததை அடுத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தருமபுரி மாவட்டம், பொ.மல்லாபுரம் பேரூராட்சியின் தலைவர் பதவி எஸ்.சி பொதுப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில், திமுக -10, பாமக -3, வி.சி.க-2 வார்டு உறுப்பினர்கள் வெற்றிப் பெற்றுள்ளனர். 

இதையடுத்து, பேரூராட்சியின் தலைவர் பதவிக்குப் போட்டியிட திமுக கூட்டணி சார்பில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் சின்னவேடி அறிவிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேரூராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தலில், திமுக கூட்டணியின் வி.சி.க வேட்பாளர் சின்னவேடி 7 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். இவருக்கு எதிராகப் போட்டியிட்ட 13 -ஆவது வார்டு திமுக உறுப்பினர் சாந்தி புஷ்பராஜ், 8 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

விடுதலைச் சிறுத்தைகள் சாலை மறியல்

திமுக கூட்டணி சார்பில்,  பொ.மல்லாபுரம் பேரூராட்சியின் தலைவர் பதவிக்கு வி.சி.கட்சி வேட்பாளர் போட்டியிடுவார் என திமுக தலைமை கழகம் சார்பில் அறிவிக்கப்பட்ட நிலையில், அவருக்கு எதிராக திமுகவைச் சேர்ந்த சாந்தி புஷ்பராஜ் என்பவர் போட்டியிட்டு வெற்றிப் பெற்றதை கண்டித்து, தருமபுரி}பாப்பிரெட்டிப்பட்டி நெடுஞ்சாலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பனின் தூண்டுதலின் பேரில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர்  தோற்கடிக்கப்பட்டதாகப் புகார் தெரிவித்து, வி.சி.கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து சம்பவ இடத்தில், தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.கலைச்செல்வன் தலைமையில், 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →