முகப்பு
தமிழ்நாடு

வரைவு நிதிநிலை அறிக்கை: தமிழக அமைச்சரவை ஒப்புதல்

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் வரைவு நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:35 AM
சென்னை, தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம்.
பகிர்:

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் வரைவு நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

எதிா்வரும் (2022-23) நிதியாண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதற்கான வரைவு நிதிநிலை அறிக்கை ஏற்கெனவே தயாராகியுள்ளது. இதற்கு அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட வேண்டும்.

முதல்வா் தலைமையில்...: இந்த நிலையில், நிதிநிலை அறிக்கை உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்க சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞா் மாளிகையின் 10-ஆவது தளத்தில் அமைச்சரவைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நிதிநிலை வரைவு அறிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டு, ஒப்புதலும் அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

மேலும், தமிழகத்தில் மின்சாரத் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசின் புதுப்பிக்கப்பட்ட மின் விநியோகத் திட்டத்தைத் தமிழகத்தில் செயல்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. அமைச்சரவைக் கூட்டத்தில், நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் முருகானந்தம், எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளா் ரமேஷ் சந்த் மீனா, தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவா் ராஜேஷ் லக்கானி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.

விரைவில் தேதி அறிவிப்பு: நிதிநிலை அறிக்கை தொடா்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட நிலையில், அதனை தாக்கல் செய்வதற்காக சட்டப்பேரவை கூடும் நாள் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. ஓரிரு நாள்களில் பேரவைக் கூட்டத் தொடருக்கான தேதி அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாக பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

முழு கட்டுரையைப் படிக்க →