தமிழ்நாடு

திருச்செந்தூர் முருகன் கோயிலில் கட்டண தரிசனம் ரத்து

DIN


திருச்செந்தூர் : திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் புதன்கிழமை (இன்று) முதல் ரூ.250 சிறப்பு கட்டணம் மற்றும் ரூ. 20 கட்டணம் தரிசனம் முறை ரத்து செய்யப்படுகிறது.

இனி ரூ.100 கட்டணம் தரிசனம் மற்றும் பொதுதரிசனம் ஆகிய இரு வரிசைகளில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும் பக்தர்கள் தரிசனப் பாதையினை ஒழுங்குபடுத்த ஆயுதப்படை காவலர்கள் பணியில் ஈடுபடுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருக்கோயில் இணை ஆணையர் (பொறுப்பு) சி.குமரதுரை தெரிவித்துள்ளதாவது,

இக்கோயிலில் உயர்நீதிமன்ற உத்தரவுபடி, இந்துசமய ஆணையர் சில நிபந்தனைகைளை உத்தரவாக பிறப்பித்தார்கள். இதன்படி ஏற்கனவே நடைமுறையில் உள்ள ரூ.250 கட்டணமும், ரூ.20 கட்டணம் ஆகிய இரு கட்டண தரிசன முறை ரத்து செய்யப்படுகிறது. ரூ.100 கட்டணம் மற்றும் பொதுதரிசனம் மட்டுமே இனி நடைமுறையில் இருக்கும்.

இந்த தரிசன முறையிலும் மூலவரை இரு வரிசையில் வருபவர்களும் சமமாக தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தரிசன முறை இன்று(மார்ச் 9) முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

கோயிலில் திரிசுதந்திரர்களை கட்டுப்படுத்தும் வகையில் பல நிபந்தனைகளுடன் கூடிய உரிமைகளை வழங்கும் வகையில் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அடையாள அட்டை வழங்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு உதவும் வகையில் இருக்கும்.

அதே போல் கோயில் பாதுகாப்பு பணியில் 125 ஆயுதபடை காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்படவுள்ளனர். இதில் முதற்கட்டமாக 60 பேர் ஈடுபட உள்ளனர். ரூ.100 கட்டணம் தரிசனம் மற்றும பொது தரிசன முறையில் வரும் பக்தர்கள் மகா மண்டபத்தில் ஒரே வழியில் அனைத்து பக்தர்களும் சமமமாக சென்று மூலவரை தரிசனம் செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் எவ்வித சிரமமின்றி தரிசனம் செய்ய பல்வேறு மாற்றங்கள் இன்னும் பரிசீலனையில் உள்ளது. விஐபி தரிசனத்திற்கு தனிநேரம் ஒதுக்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் பரிசீலனையில் உள்ளன.

கோயிலில் கைங்கரியம் செய்யும் திரிசுதந்திரர்கள் தங்கள் பெயர்களை கோயிலில் பதிவு செய்து கொள்ள வேண்டும். திரிசுதந்திரர்கள் பக்தர்களை தரிசனத்திற்கு அழைத்து . கூடாது என்ற நிபந்தனை அடிப்படையில் அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கி முறைப்படுத்தப்பட உள்ளது. இந்த நடைமுறை இன்று(9ம் தேதி) முதல் 15 நாட்கள் சோதனை அடிப்படையில் நடைமுறையில் இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.  

பேட்டியின் போது காவல் ஆய்வாளர் முரளிதரன், கோயில் உதவி ஆணையர் வெங்கடேஷன், கண்காணிப்பாளர்கள் கணேச வைத்திலிங்கம், சொர்ணம், முருகன், மக்கள் தொடர்பு அலுவலர் மாரிமுத்து உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

ஓ மை ரித்திகா!

பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த காங்கிரஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 08.05.2024

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

SCROLL FOR NEXT