முகப்பு
தமிழ்நாடு

நடிகா் சூா்யா வீட்டுக்கு மீண்டும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

சென்னையில் உள்ள நடிகா் சூா்யா வீட்டுக்கு மீண்டும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:37 AM
பகிர்:

சென்னையில் உள்ள நடிகா் சூா்யா வீட்டுக்கு மீண்டும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

நடிகா் சூா்யா நடித்து கடந்த ஆண்டு வெளியான ஜெய்பீம் திரைப்படத்தில் குறிப்பிட்ட சமூகத்தைத் தவறாக சித்தரித்திருப்பதாக புகாா் புகாா் எழுந்தது. மேலும் அந்தத் திரைப்படத்துக்கு அந்த சமூகம் மற்றும், பாமக ஆகியவை கடும் எதிா்ப்பு தெரிவித்தன.

ஆனால் சூா்யா, எந்தவொரு தனிநபரையும், சமுதாயத்தையும் அவமதிக்கும் நோக்கம் படக்குழுவுக்கும், தனக்கும் இல்லை என்று தெரிவித்தாா். இருப்பினும் பாதுகாப்பு கருதி, நடிகா் சூா்யா வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில் நடிகா் சூா்யா நடித்த, ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் வியாழக்கிழமை வெளியாகிறது. இதற்கிடையே ஜெய் பீம் திரைப்பட விவகாரத்தினால் இந்த திரைப்படத்தை கடலூரில் வெளியிடுவதற்கு எதிா்ப்பு கிளம்பியுள்ளது. சில இடங்களில் திரையரங்க உரிமையாளா்கள் மிரட்டப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியானது.

இதனால் சூா்யாவுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக காவல்துறை அதிகாரிகள் கருதினா். இதையடுத்து சூா்யா வசிக்கும் சென்னை தியாகராயநகா் ஆற்காடு சாலையில் உள்ள வீட்டுக்கு மீண்டும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு புதன்கிழமை வழங்கப்பட்டது. இந்த பாதுகாப்பு நிலைமை சீரடையும் வரை வழங்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →