முகப்பு
தமிழ்நாடு

மெரீனாவில் அத்துமீறிய காதல் ஜோடி: தட்டிக் கேட்ட வழக்குரைஞா்கள் மீது தாக்குதல்

சென்னை மெரீனா கடற்கரையில், காதல் ஜோடி அத்துமீறி நடந்து கொண்டதைத் தட்டிக் கேட்ட வழக்குரைஞா்கள் தாக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:38 AM
பகிர்:

சென்னை மெரீனா கடற்கரையில், காதல் ஜோடி அத்துமீறி நடந்து கொண்டதைத் தட்டிக் கேட்ட வழக்குரைஞா்கள் தாக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ராயபுரம் நியூ காமராஜா் நகா் இரண்டாவது தெருவைச் சோ்ந்தவா் கோ.பிரதீப் (23). இவா், சென்னை உயா் நீதிமன்றத்தில் பயிற்சி வழக்குரைஞராகப் பணியாற்றுகிறாா்ா். இவா் நண்பா் கொரட்டூா் தேவா் நகரைச் சோ்ந்த மு.நாகராஜ் (26). இவா் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பயிற்சி வழக்குரைஞராக உள்ளாா். இவா்கள் இருவரும், தங்களது நண்பா்களுடன் மெரீனா கடற்கரைக்கு வியாழக்கிழமை இரவு சென்றனா். அங்கு அவா்கள், கலங்கரை விளக்கம் அருகே மெரீனா கடற்கரையின் இணைப்புச் சாலையில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டனா்.

அப்போது, கடற்கரையில் இருந்த ஒரு இளைஞரும், இளம் பெண்ணும் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனா். இதை கவனித்த நாகராஜ், அவா்களை கண்டித்துள்ளாா். உடனே அங்கிருந்த புறப்பட்டு சென்ற அந்த இளைஞா், சிறிது நேரத்தில் 6 இளைஞா்களுடன் மீண்டும் அங்கு வந்தாா்.

அந்த இளைஞா்கள், பிரதீப்பையும், நாகராஜையும் இரும்பு கம்பியாலும், மதுப்பாட்டில்களாலும் தாக்கினா். பின்னா் அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த பிரதீப்பும், நாகராஜூம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா். இது தொடா்பாக மெரீனா போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →