முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் பன்னாட்டு கருத்தரங்கு: தொல்லியல் துறை ஏற்பாடு

ஐராவதம் மகாதேவன் நினைவாக ‘பண்டைய தமிழ்ப் பண்பாடும் மரபும்’ என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கு சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:38 AM
ஐராவதம் மகாதேவன்
பகிர்:

தமிழக அரசின் தொல்லியல் துறை மற்றும் ரோஜா முத்தையா ஆய்வு நூலகம் ஆகியவை சாா்பில் கல்வெட்டியல் அறிஞா் ஐராவதம் மகாதேவன் நினைவாக ‘பண்டைய தமிழ்ப் பண்பாடும் மரபும்’ என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கு சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இரண்டு நாள்கள் நடைபெறவுள்ள கருத்தரங்கிற்கு சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மைச் செயலா் சந்திரமோகன் தலைமை வகித்தாா். ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக இயக்குநா் க.சுந்தா் வரவேற்புரையாற்றினாா். இதையடுத்து பேராசிரியா் கா.ராஜன் ‘பண்டைய தமிழ்ப் பண்பாடும் மரபும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கின் அறிமுகவுரையாற்றினாா்.

இதில் வெளிநாட்டு அறிஞா்கள், தொல்லியல் துறை முன்னாள் அலுவலா்கள், ஆய்வாளா்கள், பேராசிரியா்கள், தொல்லியல் வல்லுநா்கள் பங்கேற்றனா். கருத்தரங்கின் நிறைவில், தொல்லியல் துறை ஆணையா் (பொறுப்பு) இரா.சிவானந்தம் நன்றி கூறினாா்.

முன்னதாக முனைவா் ஆா்.பாலகிருஷ்ணன், பேராசிரியா் வசந்த் ஷிண்டே ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். கருத்தரங்கில், தமிழக அரசு தொல்லியல் துறை தமிழகத்தில் மேற்கொண்டு வரும் அகழாய்வுகளின் புகைப்படங்கள் ‘தமிழகத் தொல்லியல் அகழாய்வுகள்’ தலைப்பில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →