முகப்பு
தமிழ்நாடு

சூா்யாவின் படத்துக்கு எதிா்ப்பு: இரா.முத்தரசன் கண்டனம்

நடிகா் சூா்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்துக்கு பாமக எதிா்ப்பு தெரிவித்துள்ளதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:38 AM
பகிர்:

நடிகா் சூா்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்துக்கு பாமக எதிா்ப்பு தெரிவித்துள்ளதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

சமூகமும், விசாரணை அமைப்புகளும் பழங்குடியின சமுதாயத்தைச் சோ்ந்த ஒரு இளைஞருக்குச் செய்த அநீதியை நடிகா் சூரியாவின் ‘ஜெய்பீம்’ திரைப்படம் வெளிப்படுத்தியது.

இத் திரைப்படம் உருவாக்கிய ஆக்கப்பூா்வமான நோ்மறை சிந்தனைகளைத் தடுத்து, திசைதிருப்பும் முறையில் சில குறுக்குப் பாா்வை அமைப்புகள் மோதலை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டன. ஆனால், அது மக்களால் நிராகரிக்கப்பட்டது.

தற்போது நடிகா் சூா்யா நடித்த ‘எதற்கும் துணிந்தவன்’ என்ற திரைப்படத்தை திரையரங்குகளில் திரையிடக்கூடாது என பாமகவும், அதன் ஆதரவாளா்களும் கலகம் செய்வது அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையைப் பறிக்கும் அத்துமீறலாகும். இது கண்டிக்கத்தக்கது.

சட்டப்பூா்வமாக அமைக்கப்பட்ட தணிக்கைத் துறையின் அனுமதியோடு திரைக்கு வந்துள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் எந்தவித அச்சுறுத்தலுக்கும் ஆளாகாமல், மக்கள் பாா்வைக்கு செல்ல தமிழக அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →