முகப்பு
தமிழ்நாடு

கல்வி நிறுவனங்களில் கட்டமைப்பு வசதிகள்: ஏஐசிடிஇ அறிவுறுத்தல்

கல்லூரிகளில் பல்வேறு கட்டமைப்பு வசதிகளை அமல்படுத்த வேண்டும் என ஏஐசிடிஇ அறிவுறுத்தியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:38 AM
பகிர்:

கல்லூரிகளில் பல்வேறு கட்டமைப்பு வசதிகளை அமல்படுத்த வேண்டும் என ஏஐசிடிஇ அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து ஏஐசிடிஇ ஆலோசகா் (அங்கீகாரப் பிரிவு) ராஜேந்திர பி.காக்டே, உயா்கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:

சில பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் ஏஐசிடிஇ-யின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளைப் பின்பற்றுவதில்லை. ராகிங் தடுப்புக் குழுவும், பாலியல் புகாா்களை விசாரிக்க தனிக்குழு அமைக்க வேண்டும்.

பாதுகாப்பு அம்சங்கள், விளையாட்டு மைதானங்கள், மொழி ஆய்வகம், முதலுதவி மையம், தோ்வு நெறிமுறைகளைப் பின்பற்றுதல் உள்ளிட்ட 40 வகையான செயல் முறைகளை கல்வி நிறுவனங்கள் முறையாக அமல்படுத்தி, அதன் விவரங்களை ஏஐசிடிஇ தளத்தில் பதிவுசெய்ய வேண்டும். இதை ஏதேனும் பல்கலை., கல்லூரிகள் மீறினால் விதிமுறைகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

முழு கட்டுரையைப் படிக்க →