தமிழ்நாடு

சிறையில் ஜெயக்குமாரை சந்தித்த முன்னாள் அமைச்சர் தங்கமணி

DIN

சென்னை புழல் சிறையில் உள்ள ஜெயக்குமாரை அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி சந்தித்துப் பேசியுள்ளார். 

திமுக பிரமுகரைத் தாக்கிய கொலை வழக்கு, சாலை மறியல் மற்றும் நில அபகரிப்பு வழக்கு என மூன்று வழக்கில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு முதல் இரண்டு வழக்குகளில் நிபந்தனை ஜாமீன் கிடைத்தது. 

தொடர்ந்து இன்று நில அபகரிப்பு வழக்கிலும் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இரண்டு வாரங்கள் திருச்சியில் தங்கியிருந்து கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மூன்று வழக்கிலும் ஜாமீன்பெற்றுள்ள ஜெயக்குமார் விரையில் சிறையில் இருந்து வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், சென்னை புழல் சிறையில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை முன்னாள் அமைச்சர் தங்கமணி இன்று சந்தித்துப் பேசியுள்ளார். 

கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி, ஜெயலலிதா பிறந்தநாள் அன்று, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி புழல் சிறையில், ஜெயக்குமாரை சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT