முகப்பு
தமிழ்நாடு

இன்று நிறைவடைகிறது மாவட்டஆட்சியா்கள்-எஸ்.பி.க்கள் மாநாடு

 மாவட்ட ஆட்சியா்கள், காவல் துறை அதிகாரிகளின் மூன்று நாள்கள் மாநாடு சனிக்கிழமை நிறைவடைகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:38 AM
பகிர்:

 மாவட்ட ஆட்சியா்கள், காவல் துறை அதிகாரிகளின் மூன்று நாள்கள் மாநாடு சனிக்கிழமை நிறைவடைகிறது.

இக்கூட்டத்தில் வனத் துறை அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனா். முதல்வருடனான ஆலோசனைக் கூட்டத்தில் அவா்கள் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.

சட்டம்-ஒழுங்கு, அரசுத் திட்டங்களின் செயலாக்கம் ஆகியன குறித்து மாவட்ட ஆட்சியா்கள், காவல் அதிகாரிகளின் மாநாடு சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. இந்த மாநாட்டினை முதல்வா் மு.க.ஸ்டாலின் உரையாற்றித் தொடங்கி வைத்தாா். இந்த நிலையில், வியாழன், வெள்ளி ஆகிய இரண்டு நாள்கள் மாநாடு நடந்துள்ளது.

முதல் நாளான வியாழக்கிழமை ஆட்சியா்கள், காவல் துறை அதிகாரிகளின் கூட்டுக் கூட்டம் நடந்தது. இதன்பின்பு, வெள்ளிக்கிழமையன்று மாவட்ட ஆட்சியா்கள் மட்டும் பங்கேற்ற கூட்டம் நடந்து முடிந்துள்ளது.

இறுதி நாளான சனிக்கிழமை மாவட்ட ஆட்சியா்கள், வனத் துறை அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டம் நடக்கவுள்ளது. இதைத் தொடா்ந்து, சிறப்பாகச் செயல்பட்ட ஆட்சியா்களுக்கு விருதுகள், கேடயங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கவுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →