நடிகர் சங்கத் தேர்தல்: மார்ச்-20 வாக்கு எண்ணிக்கை
நடிகர் சங்கத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை வருகிற மார்ச் 20 ஆம் தேதி நடத்தப்படுகிறது.
நடிகர் சங்கத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை வருகிற மார்ச் 20 ஆம் தேதி நடத்தப்படுகிறது.
நடிகர் சங்கத்திற்காக தேர்தலில் கடந்த 2019 ஆம் ஆண்டு நாசர் தலைமையில் ஒரு அணியும் இயக்குநர் கே.பாக்கியராஜ் தலைமையிலான அணியும் போட்டியிட்டன.
இந்நிலையில், அந்தத் தேர்தல் செல்லாது என உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
Advertisement
இருப்பினும் கடந்த 2019 , ஜுன் 23 ஆம் தேதி நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தனிநீதிபதி கல்யாண சுந்தரம் தேர்தல் செல்லாது என அறிவித்ததை எதிர்த்து நாசர், விஷால், கார்த்திக் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
பின், கடந்த பிப்.23 அன்று இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் 2019 ஆம் ஆண்டு நடந்த நடிகர் சங்கத் தேர்தல் செல்லும் எனவும் மறுதேர்வு தேவையில்லை என்று தீர்ப்பு வழங்கியதுடன் வங்கி லாக்கரில் இருக்கும் எண்ணப்படாத வாக்குகளையும் எண்ண உத்தரவு பிறப்பித்தனர்.
தற்போது, நீதிமன்ற உத்தரவையடுத்து வருகிற மார்ச் 20 ஆம் தேதி வங்கி லாக்கரில் இருக்கும் வாக்குகள் எண்ணப்பட இருக்கிறது.