தமிழ்நாடு

எல்லாம் என்னால்தான் என்ற எண்ணம் எனக்கில்லை: முதல்வர் ஸ்டாலின்

DIN


சென்னை: எல்லாம் என்னால்தான் நடக்கிறது என்ற எண்ணத்தில் நான் செயல்படவில்லை என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னையில் 3வது நாளாக நடபெறும் ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள், வனத்துறையினர் பங்கேற்ற மாநாட்டில் கலந்து கொண்டு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.

இன்றுடன் நிறைவு பெறும் ஆட்சியர்கள், வனத்துறை அதிகாரிகள் மாநாட்டில் முதல்வர் ஆற்றிய உரையில், மக்கள் நம்மை நம்பி ஆட்சிப் பொறுப்பைக் கொடுத்திருக்கிறார்கள். எல்லாம் என்னால்தான் நடக்கிறது என்ற எண்ணத்தில் நான் செயல்படவில்லை என்று கூறினார்.

மேலும், கடைக்கோடி மக்களுக்கும் அரசின் திட்டங்கள் போய்ச் சேர வேண்டும். சட்டம் -  ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குற்றங்களைக் குறைப்பதற்கு பதிலாக, குற்றங்களே நடைபெறவில்லை என்ற சூழலை காவல்துறையினர் உருவாக்க வேண்டும்.

அரசியல் உள்நோக்கத்தோடு மதமோதல்களை சிலர் திட்டமிட்டு உருவாக்குகிறார்கள். சமுதாயத்தில் மோதலை ஏற்படுத்தும்  செயலை தடுக்க வேண்டும். போக்சோ வழக்குகளில் உரிய நீதி கிடைப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

சமூக வலைத்தளங்கள் மூலம் ஜாதி, மத மோதல்களை ஏற்படுத்த நினைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுகக்ப்பட வேண்டும். குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரும் துறையாக மட்டுமல்லாமல், குற்றமே நடக்காத துறையாகவும் காவல்துறை இருக்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT