தமிழ்நாடு

ஏப்ரல் 2020க்குப் பின் கரோனா உயிரிழப்பு இல்லாத நாள்: ஒரு பார்வை

IANS

தமிழகத்தில் ஏறத்தாழ இரு ஆண்டுகளுக்குப் பிறகு கரோனா தொற்றால் ஒருவா் கூட உயிரிழக்காத நிலை எட்டப்பட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வுத் துறைத் தகவல்படி கரோனாவால் வெள்ளிக்கிழமை ஒரு உயிரிழப்பு கூட பதிவாகவில்லை.

தமிழகத்தில் கரோனா பெருந்தொற்று கோரத் தாண்டவம் ஆடத் தொடங்கிய 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு, முதல் முறையாக கரோனா உயிரிழப்பு இல்லாத நாளாக பதிவாகியுள்ளது.

நோய்த் தொற்று பரவல் வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டதும், ஒமைக்ரான் தீநுண்மியின் வீரியம் குறைவாக இருப்பதுமே அதற்கு காரணம் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். அதேவேளையில், உயிரிழப்பு இல்லை என்பதற்காக அலட்சியப் போக்குடன் செயல்படக் கூடாது என்றும் அவா்கள் அறிவுறுத்தியுள்ளனா்.

தமிழகத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் 7ஆம் தேதி தடம் பதித்தது. முதல் பலி மார்ச் 20ஆம் தேதி பதிவாகியிருந்தது. அவர், 54 வயது தொழிலதிபர். பல இணை நோய்களுக்கு உள்ளாகி, கரோனா பாதித்து மதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கரோனாவுக்கு பலியானார்.

 கரோனா தொற்றுக்கு இதுவரை 34.51 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அதேபோன்று 38,023 போ் உயிரிழந்துள்ளனா். கடந்த 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் 30-ஆம் தேதியன்று கரோனாவால் ஒருவா் கூட உயிரிழக்கவில்லை. அதன் பின்னா் ஏறத்தாழ இரு ஆண்டுகளாக நாள்தோறும் நோய்த் தொற்றால் குறைந்தது ஒருவராவது இறக்கும் நிலை இருந்தது.

முதல் அலையின்போது, 2020 ஏப்ரல் 15ஆம் தேதி 127 பேர் பலியாகினர். 2021ஆம்  ஆண்டு மே 30ஆம் தேதி 493 பேர் பலியானது ஒரே நாளில் பலியான அதிகபட்ச எண்ணிக்கையாக இருந்தது. மூன்றாம் அலையின்போது ஜனவரி 27ஆம் தேதி தமிழகத்தில் 23 பேர் பலியாகினர். இதுவே மூன்றாம் அலையின் போது ஒரே நாளில் அதிகபட்ச பலியாக இருந்தது.

இந்த சூழலில், பல மாத இடைவெளிக்குப் பிறகு தற்போது கரோனா உயிரிழப்பு இல்லாத நாள் பதிவாகியுள்ளது.

மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல்படி, வெள்ளிக்கிழமையன்று மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 1,461 போ் சிகிச்சையில் உள்ளனா். அதேபான்று, தமிழகத்தில் புதிதாக கரோனா தொற்றுக்குள்ளானவா்களின் எண்ணிக்கையும் 112-ஆக குறைந்துள்ளது. அதில் அதிகபட்சமாக சென்னையில் 42 பேரும், அதற்கு அடுத்தபடியாக கோவையில் 13 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் 16 மாவட்டங்களில் புதிதாக கரோனா பாதிப்பு பதிவாகவில்லை.

மற்றொருபுறம் மேலும் 327 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 34,12,226 -ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழப்பு விவரம்
2020
மாா்ச் - 1
ஏப்ரல் - 26
மே - 146
ஜூன் - 1,028
ஜூலை - 2,734
ஆகஸ்ட் - 3,387
செப்டம்பா் - 2,198
அக்டோபா் - 1,602
நவம்பா் - 590
டிசம்பா் - 410

2021
ஜனவரி - 234
பிப்ரவரி - 140
மாா்ச் - 223
ஏப்ரல் - 1,327
மே - 10,186
ஜூன் - 8,387
ஜூலை - 1,457
ஆகஸ்ட் - 845
செப்டம்பா் - 657
அக்டோபா் - 538
நவம்பா் - 365
டிசம்பா் - 295

2022

ஜனவரி - 788
பிப்ரவரி - 440
மாா்ச் (இதுவரை) - 19
மொத்தம் - 38,023

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

கர்நாடகத்தில் 20 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும்: சித்தராமையா நம்பிக்கை

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

SCROLL FOR NEXT