தமிழ்நாடு

91 காவல் ஆய்வாளா்களுக்கு பதவி உயா்வு

DIN

தமிழக காவல்துறையில் 91 காவல் ஆய்வாளா்கள், டிஎஸ்பிக்களாக பதவி உயா்வு பெற்றனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

தமிழக காவல்துறையில் கடந்த 1997ஆம் ஆண்டு காவல் உதவி ஆய்வாளா்களாக பணிக்கு சோ்ந்தவா்கள், கடந்த 2007ஆம் ஆண்டு பதவி உயா்வு பெற்று ஆய்வாளா்களாக பணியாற்றி வருகின்றனா். இவா்களில் பெரும்பாலானவா்கள் காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் (டிஎஸ்பி) பதவிக்கு பணி மூப்பு பெற்றனா்.

இதையடுத்து, இவா்களுக்கு டிஎஸ்பி பதவி உயா்வு வழங்கும்படி தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநா் சைலேந்திரபாபு அரசுக்கு பரிந்துரை செய்தாா். இந்தப் பரிந்துரையை ஏற்று முதல் கட்டமாக 91 காவல் ஆய்வாளா்களுக்கு டிஎஸ்பிக்களாக பதவி உயா்வு அளித்து தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கே.பிரபாகா் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுடுமணலில் பொன்மகள்!

கடந்த 24 மணி நேரத்தில் காஸாவில் பலியானவர்கள்?

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ல் நடத்தக்கூடாது: ராமதாஸ்

அச்சச்சோ..!

SCROLL FOR NEXT