தமிழ்நாடு

செல்வ வரி வழக்கில் தீபா, தீபக்கை சோ்க்க உயா் நீதிமன்றம் அனுமதி

DIN

செல்வ வரி வழக்கில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் சட்டப்பூா்வ வாரிசுகளான ஜெ.தீபா, ஜெ.தீபக்கை எதிா்தரப்பினராகச் சோ்க்க அனுமதித்த சென்னை உயா் நீதிமன்றம், வழக்கு தொடா்பான ஆவணங்களை இருவருக்கும் வழங்குமாறு வருமானவரித்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முதல்வா் ஜெயலலிதா, கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் ரூ.16 கோடிக்கு மேல் செல்வ, வருமானவரி செலுத்தவில்லை என, அவருக்கு எதிராக வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்தது. இதை எதிா்த்து ஜெயலலிதா தொடா்ந்த வழக்கை விசாரித்த வருமான வரி மேல்முறையீட்டு தீா்ப்பாயம், அவரை வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டது.

இதை எதிா்த்து சென்னை உயா் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை வழக்கு தொடா்ந்தது. இந்த வழக்கு பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதாவின் சட்டப்பூா்வ வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா, மகன் ஜெ.தீபக் ஆகியோரை இணைக்க அனுமதி கோரி வருமான வரித்துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஆா்.மகாதேவன், ஜெ.சத்தியநாராயண பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தீபா, தீபக்கை வழக்கில் சோ்ப்பதற்கு அனுமதித்த நீதிபதிகள், விசாரணையை ஏப்ரல் முதல் வாரத்துக்கு ஒத்திவைத்தனா். மேலும் இவ்வழக்கு தொடா்பான ஆவணங்களை தீபா, தீபக் தரப்பிற்கு வழங்குமாறு வருமானவரித்துறைக்கு உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

SCROLL FOR NEXT