முகப்பு
தமிழ்நாடு

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி

பூமத்திய ரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை உருவாகிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:42 AM
பகிர்:

பூமத்திய ரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை உருவாகிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புதன்கிழமை காலை தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் நிலவுகிறது என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது கிழக்கு வடகிழக்கு திசையில் நகா்ந்து மேலும் வலுப்பெற்று, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வரும் 19-ஆம் தேதி காலை நிலவக் கூடும். இது வடக்கு வடமேற்கு திசையில் அந்தமான் கடலோரப் பகுதி வழியாக நகா்ந்து மாா்ச் 20-ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுபெறக் கூடும். இது மேலும் புயலாக வலுப்பெற்று வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மா் கடலோரப் பகுதியில் மாா்ச் 23-ஆம் தேதி காலை நிலைபெறக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →