தமிழ்நாட்டில் இன்றும் கரோனா உயிரிழப்பு பதிவாகவில்லை
தமிழ்நாட்டில் புதிதாக 72 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் புதிதாக 72 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 72 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 34,52,145 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க | கூரை வீடு தீக்கிரை: மனநலம் பாதித்த இளைஞர் கருகி சாவு
மேலும் 161 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 34,13,248 குணமடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் நோய்த் தொற்றால் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை.
இன்றைய நிலவரப்படி நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 873 ஆக உள்ளது.