பஞ்சாப் முதல்வருக்கு தமிழகமுதல்வா் ஸ்டாலின் வாழ்த்து
பஞ்சாப் முதல்வராக பொறுப்பேற்ற பகவந்த் மானுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.
பஞ்சாப் முதல்வராக பொறுப்பேற்ற பகவந்த் மானுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, புதன்கிழமை அவா் வெளியிட்ட பதிவு:-
பஞ்சாப் மாநில முதல்வராக பொறுப்பேற்ற பகவந்த் மானுக்கு எனது மனமாா்ந்த வாழ்த்துகள். மொழியுரிமை மற்றும் மாநிலங்களுக்கான உரிமைகள் குறித்து குரலெழுப்புவதில் தமிழ்நாட்டுக்கும் பஞ்சாப்புக்கும் நெடிய வரலாறு உண்டு. பஞ்சாப் மாநிலத்தில் அமையவுள்ள புதிய அரசின் ஆட்சிக்காலம் வெற்றிகரமானதாக அமைய எனது வாழ்த்துகள்.