முகப்பு
தமிழ்நாடு

ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக் கட்டணம் குறைப்பு: தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் கரோனா பரிசோதனைக்கான கட்டணத்தைக் குறைத்து தமிழக அரசு அறிவித்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:43 AM
பகிர்:

தமிழகத்தில் கரோனா பரிசோதனைக்கான கட்டணத்தைக் குறைத்து தமிழக அரசு அறிவித்துள்ளது. 

முதலமைச்சர் காப்பீட்டுத் திட்ட பயனாளிகளுக்கு கரோனா ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக் கட்டணம் ரூ. 400-ல் இருந்து ரூ.250-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் காப்பீட்டுத் திட்ட பயனாளிகள் அல்லாதவர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக் கட்டணம் ரூ.700-லிருந்து ரூ.400-ஆக குறைத்து அறிவித்துள்ளது.

மேலும், குழு மாதிரிகளுக்கான கட்டணம் ரூ.150-ல் இருந்து ரூ.75-ஆகக் குறைத்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

மேற்குறிப்பிட்ட கட்டணத்தைவிட அதிகக் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. எனினும், தொற்றினைத் தடுக்க தடுப்பூசி இயக்கத்தை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.