பேரவையிலிருந்து அதிமுக வெளிநடப்பு
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கிய உடனேயே அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கிய உடனேயே அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
தமிழக அரசின் 2022-23 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கிய உடனேயே அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியதை கண்டித்து அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.
மேலும், சட்டப்பேரவையில் பேச வாய்ப்பளிக்குமாறு அதிமுக உறுப்பினர்கள் கூச்சலில் ஈடுபட்டனர். அவர்களை அமைதியாக இருக்குமாறு அல்லது வெளிநடப்பு செய்யுமாறு பேரவைத் தலைவர் அப்பாவு கூறியதை அடுத்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.