முகப்பு
தமிழ்நாடு

விரைவு ரயில்களின் வழித்தடம் மாற்றம்!

குருவாயூரிலிருந்து சென்னை செல்லும் விரைவு ரயில் உள்ளிட்ட சில விரைவு ரயில்களின் வழித்தடங்கள் குறிப்பிட்ட நாள்களில் மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 மார்ச், 2026 at 11:54 PM
சிறப்பு ரயில்
பகிர்:

குருவாயூரிலிருந்து சென்னை செல்லும் விரைவு ரயில் உள்ளிட்ட சில விரைவு ரயில்களின் வழித்தடங்கள் குறிப்பிட்ட நாள்களில் மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மதுரை கோட்டத்தில் நடைபெறும் பராமரிப்புப் பணி காரணமாக சில ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாா்ச் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரியில் இருந்து காலை 5.50 மணிக்கு புறப்பட்டு ஹௌரா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 12666), மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி ஆகிய வழியாக ஹௌரா விரைவு ரயில் இயக்கப்படும். அந்த ரயில் கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் நிலையங்களுக்கு செல்லாது. கூடுதல் நிறுத்தமாக சிவகங்கை, புதுக்கோட்டை இடம் பெறுகின்றன.

மாா்ச் 4, 5, 6, 7, 8, 11, 12, 13, 14, 15, 18, 19, 20, 21, 22, 25, 26, 27, 28, 29 ஆகிய தேதிகளில் குருவாயூரில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூா் வரும் விரைவு ரயில் (எண்: 16128), மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக எழும்பூா் வந்தடையும். சோழவந்தான், கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், மணப்பாறை நிலையங்களுக்கு அந்த ரயில் செல்லாது. கூடுதலாக, சிவகங்கை, புதுக்கோட்டையில் நின்று செல்லும்.

வரும் மாா்ச் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரியில் இருந்து காலை 5.15 மணிக்கு புறப்பட்டு ஹைதராபாத் செல்லும் சிறப்பு ரயில் (எண்: 07229) மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி ஆகிய வழியாக ஹைதராபாத் செல்லும். கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் நிலையங்களுக்குச் செல்லாது. கூடுதலாக, அருப்புக்கோட்டை, சிவகங்கை, புதுக்கோட்டை நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →