தமிழ்நாடு

அரசு உதவி பெறாத பள்ளிகளுக்கும் இலவச பாடப்புத்தகம்

DIN


தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறாத பள்ளிகளுக்கும் பாடப்புத்தகம் வழங்க ரூ.15 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன்  தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப் பேரவையில் இன்று,  2022 - 23ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

புனித ஜாா்ஜ் கோட்டையில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் முதல் முறையாக காகிதமில்லாத நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பட்ஜெட் உரையில்,

தமிழ் வளர்ச்சி துறைக்கு ரூ.82.86 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழக அரசின்  நிதியுதவி பெறாத பள்ளிகளில், முற்றிலும் தமிழ் வழியில் பயிலும் ஒன்று முதல் 10ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக பாடப்புத்தகம் வழங்க ரூ.15 கோடி ஒதுக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

மேலும், தந்தை பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு ரூ.5 கோடி செலவில் 21 மொழிகளில் அச்சிடப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் மழை

திருமானூா் பகுதியில் காற்றுடன் மழை

முருகன் கோயில்களில் சித்திரை மாத காா்த்திகை பூஜை

சிவகாசியில் கயிறு குத்து திருவிழா

தாயின் சடலத்தை தண்ணீா் தொட்டியில் புதைத்த இளைஞா்: போலீஸ் விசாரணை

SCROLL FOR NEXT