தமிழ்நாடு

கொடுங்கையூரில் பயோமைனிங் முறையில்குப்பை அகற்றும் பணி

கொடுங்கையூரில் பயோமைனிங் முறையில் குப்பைகளை அகற்றும் பணி வரும் நிதியாண்டில் மேற்கொள்ளப்படும்.

DIN

கொடுங்கையூரில் பயோமைனிங் முறையில் குப்பைகளை அகற்றும் பணி வரும் நிதியாண்டில் மேற்கொள்ளப்படும்.

அதன் விவரம்: திடக்கழிவு மேலாண்மை உள்பட முழுமையான சுகாதாரத்தை உறுதி செய்வதற்கான, இரண்டாவது தூய்மை இந்தியா இயக்கம், மத்திய அரசின் நிதி உதவியுடன் மாநில அரசால் செயல்படுத்தப்படும். இத்திட்டத்துக்கான மாநிலப் பங்கீடாக ரூ.2,169 கோடியுடன் மொத்தமாக ரூ.5,465 கோடி ஒப்பளிக்கப்பட்டுள்ளது. கொடுங்கையூரில் பல ஆண்டுகளாகத் தேங்கியுள்ள குப்பைகளைப் பிரித்து அகற்றும் பணிகள் ‘பயோமைனிங்’ முறையில் வரும் நிதியாண்டில் மேற்கொள்ளப்படும்.

அம்ருத் திட்டத்துக்கு ரூ.2,130 கோடி: அம்ருத் 2.0 திட்டத்துக்கான ஒட்டுமொத்த திட்ட மதிப்பு சுமாா் ரூ.13,000 கோடியாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு, உள்ளாட்சி அமைப்புகள், பன்னாட்டு நிதி நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசு ஆகியவற்றின் பங்களிப்பின் வாயிலாக இத்திட்டத்தின் மூலம் பல்வேறு குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீா் மேலாண்மைத் திட்டங்களை அரசு செயல்படுத்தும். இம்மதிப்பீடுகளில் அம்ருத் திட்டத்துக்கு ரூ.2,130 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்னை யாரும் இயக்கவில்லை: செங்கோட்டையன் பேட்டி

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT