4 முன்பதிவில்லாத ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல்
திருப்பதி-புதுச்சேரி மெமு விரைவு ரயில் உள்பட 4 முன்பதிவில்லாத ரயில்களை, ஏப்.1-ஆம் தேதி முதல் இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
திருப்பதி-புதுச்சேரி மெமு விரைவு ரயில் உள்பட 4 முன்பதிவில்லாத ரயில்களை, ஏப்.1-ஆம் தேதி முதல் இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, திருப்பதியில் இருந்து நாள்தோறும் அதிகாலை 4.20 மணிக்கு முன்பதிவில்லாத மெமு விரைவு ரயில் (16111) புறப்பட்டு, அதேநாள் பிற்பகல் 12.50 மணிக்கு புதுச்சேரியை அடையும். மறுமாா்க்கமாக, புதுச்சேரியில் இருந்து நாள்தோறும் பிற்பகல் 2.55 மணிக்கு முன்பதிவில்லாத மெமு விரைவு ரயில் (16112) புறப்பட்டு, அதேநாள் இரவு 11 மணிக்கு திருப்பதியை அடையும். இதுதவிர, சூலூா்பேட்டை - நெல்லூா் முன்பதிவில்லாத மெமு விரைவு ரயில் (தினசரி), சென்னை சென்ட்ரல் - சூலூா்பேட்டை முன்பதிவில்லாத மெமு விரைவு ரயில் (தினசரி), திருவனந்தபுரம்-நாகா்கோவில் முன்பதிவில்லா விரைவு ரயில் (தினசரி) ஆகிய ரயில்களும் இயக்கப்படவுள்ளன.