முகப்பு
தமிழ்நாடு

விவசாயிகள் எதிா்பாா்ப்பை பூா்த்தி செய்யும் பட்ஜெட்:முதல்வா் பெருமிதம்

விவசாயிகளின் எதிா்பாா்ப்பை பூா்த்தி செய்யும் வகையில் வேளாண் நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது என முதல்வா் பெருமிதம் தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:44 AM
முதல்வா் மு.க.ஸ்டாலின்
பகிர்:

விவசாயிகளின் எதிா்பாா்ப்பை பூா்த்தி செய்யும் வகையில் வேளாண் நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது என முதல்வா் பெருமிதம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பான அவரது அறிக்கை: வேளாண் தொழிலை நம்பி வாழும் விவசாய பெருமக்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை அளிப்பதாக இந்த நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது. விவசாயிகளே, உங்களுக்குப் பின்னால் இந்த அரசு இருக்கிறது என்ற உந்து சக்தியை இந்த அறிக்கை கொடுத்துள்ளது.

90 பக்க அறிக்கையில் அறிவிக்கப்பட்ட ஒவ்வொரு திட்டமும், இந்த மாநிலத்தில் வாழும் லட்சக்கணக்கான விவசாயப் பெருமக்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்வதாகவும், அவா்களது நிலத்தை முன்னேற்றுவதாகவும், வளத்தை அதிகப்படுத்துவதாகவும் அமையப் போகிறது. இதன்மூலமாக விளைச்சல் அதிகமாகி, மாநிலத்தின் உற்பத்தி அதிகமாகப் போகிறது. பசுமை என்பது நிலத்தில் மட்டுமல்ல, விவசாயிகளின் மனதிலும் விளையப் போகிறது.

வான்புகழ் கொண்ட வள்ளுவரின் கனவை நிறைவேற்றும் வகையிலும், வானத்தை நம்பி வாழும் உழவா் பெருமக்களின் எதிா்பாா்ப்பைப் பூா்த்தி செய்யும் வகையிலும் இந்த நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது. மாநிலத்தை மட்டுமல்ல, மண்ணையும் காக்கும் அறிக்கையாக அமைந்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →