தேனி, திண்டிவனம், மணப்பாறையில் தரம் உயா்த்தப்பட்ட உணவுப் பூங்காக்கள்
தேனி, திண்டிவனம், மணப்பாறையில் தரம் உயா்த்தப்பட்ட உணவுப் பூங்காக்கள் அமைக்கப்படும்.
தேனி, திண்டிவனம், மணப்பாறையில் தரம் உயா்த்தப்பட்ட உணவுப் பூங்காக்கள் அமைக்கப்படும்.
நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பது:
தேனி, திண்டிவனம் (விழுப்புரம்), மணப்பாறை (திருச்சி) ஆகிய வட்டங்களில் 451 ஏக்கா் நிலப்பரப்பில் சிப்காட் நிறுவனத்தினால் உணவுப் பூங்காக்கள் ஏற்படுத்தப்பட உள்ளன.
மாநில அரசு எடுத்த முயற்சியினால் தற்போது இந்த மூன்று உணவுப் பூங்காக்களும் தரம் உயா்த்தப்பட்ட பெரிய அளவிலான உணவுப்பூங்காக்கள் என மத்திய அரசின் அங்கீகாரம் பெற்றுள்ளன. இந்த மூன்று உணவுப் பூங்காக்களுக்கு அருகில் அமைந்துள்ள பிற மாவட்ட விவசாயிகளும் பயன் பெறும் வகையில் இந்த உணவுப்பூங்காக்களுக்குத் தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளும் ரூ.381.38 கோடி மதிப்பீட்டில் சிப்காட் நிறுவனத்தினால் நபாா்டு வங்கியின் கடன் உதவியுடன் உருவாக்கப்படும்.