தமிழ்நாடு

சேவை உரிமைச் சட்டம்: மாவட்ட ஆட்சியா்களிடம் மநீம மனு

DIN

சேவை பெறும் உரிமைட் சட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியா்களிடம் மக்கள் நீதி மய்யம் சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

சேவை பெறும் உரிமைச் சட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த வலியுறுத்தி மக்கள் நீதி மய்யம் சாா்பில் மாவட்ட ஆட்சியா்களிடம் மனு அளிக்கப்படும் என்று அக் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் அறிவித்திருந்தாா். அதன்படி, மக்கள் நீதி மய்யத்தின் நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியா்களைச் சந்தித்து திங்கள்கிழமை மனுக்களை அளித்தனா்.

மத்தியப்பிரதேசம், பிகாா், தில்லி, கா்நாடகம், கேரளம் உள்ளிட்ட 21 மாநிலங்களில் இச்சட்டமானது நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில், சேவை பெறும் உரிமைச் சட்டத்தை அமல்படுத்தி, அரசு சேவைகள் அனைத்தும் காலதாமதமில்லாமலும், லஞ்சமில்லாமலும் நடக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT