கரோனா கட்டுப்பாடு - ஊரடங்கு குறித்து தமிழக முதல்வர் ஆய்வு
தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள கரோனா கட்டுப்பாடு மற்றும் ஊரடங்கு குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள கரோனா கட்டுப்பாடு மற்றும் ஊரடங்கு குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் நேற்று 52 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாநிலத்தில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 576 ஆக உள்ளது.
இதனால், தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதிப்பு 34.52 லட்சமாகவும், குணமடைந்தோர் 34.13 லட்சமாகவும், பலி எண்ணிக்கை 38,025 ஆகவும் உள்ளது.
இந்த நிலையில், தலைமைச் செயலகத்தில் இன்று தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர், பொதுத்துறை செயலாளர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சிறப்புப் பணி அலுவலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், உலக அளவில் கரோனா தொற்று நிலவரம் உள்பட, பல நாடுகளில் கரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருவது ஆகியவை குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.