தமிழ்நாடு

முதல்வரை சந்தித்த நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள்

இன்று தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகள் தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி

DIN

நடிகர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நடிகர் நாசர் வெற்றி பெற்றுள்ளார்.

இன்று தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகள் தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி முருகன், செயற்குழு உறுப்பினர்கள் சரவணன், மனோபாலா, கோவை சரளா, லதா, தளபதி தினேஷ் உள்ளிட்ட வெற்றி பெற்ற நிர்வாகிகள் பலர் முதல்வரை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

இந்த நிகழ்வின்போது, சட்டமன்ற உறுப்பினர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உடனிருந்தார். 

கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் தென்னிந்திய நடிகர் சங்கத்துக்குத் தேர்தல் நடைபெற்றது. இதில் கே. பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியினரும், நாசர் தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிட்டனர். தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தேர்தல் செல்லாது என அறிவித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, வாக்கு எண்ணிக்கைக்கும் தடை விதித்தார்.

தேர்தல் செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவைக் கடந்த மாதம் விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்தனர்.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் நடிகர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு பாண்டவர் அணி சார்பில் போட்டியிட்ட நடிகர் நாசர் வெற்றி பெற்றுள்ளார்.

இதன்மூலம் நடிகர் சங்கத் தேர்தலில் தலைவர், பொதுச்செயலர், பொருளாளர், துணைத் தலைவர்கள் ஆகிய 5 பதவிகளை பாண்டவர் அணி கைப்பற்றியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரசிக்க வைக்கும் தாய் கிழவி முதல் பாடல்!

கமல் ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயனின் புதிய படம்?

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்! | DMK | TNGovt

ஓடிடியில் பராசக்தி! இந்த வாரம் வெளியாகும் படங்கள்!

பிகார் தேர்தலில் அரசியலமைப்பு விதிமீறல்: தேசிய ஜனநாயகக் கூட்டணி மீது நடவடிக்கை?

SCROLL FOR NEXT