முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, வினாடிக்கு 2671 கன அடியாக குறைந்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:46 AM
மேட்டூர் அணை நீர்மட்டம் 104.95 அடியாக உள்ளது
பகிர்:


மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, வினாடிக்கு 2671 கன அடியாக குறைந்துள்ளது.

கடந்த சில நாள்களாக காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவந்த லேசான மழையின் காரணமாக, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் படிப்படியாக அதிகரித்து. நேற்று புதன்கிழமை காலை வினாடிக்கு 3135 கன அடியாகவும் அதிகரித்தது.  இரவு மழை சற்று தணிந்ததால் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2,671 கன அடியாக சரிந்தது. 

நீர்வரத்து: நீர்வரத்து சரிந்தாலும் குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் புதனிகிழமை காலை 104.90 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று வியாழக்கிழமை காலை 104.95 அடியாக உயர்ந்துள்ளது. 

வெளியேற்றம்: அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 

நீர் இருப்பு: அணையின் நீர் இருப்பு 71.40 டி.எம்.சியாக உள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →