முகப்பு
தமிழ்நாடு

போதைப் பொருள் விற்பனை: ஏழு நாள்களில் 17 போ் கைது

சென்னையில் போதைப் பொருள் விற்ாக 7 நாள்களில் 17 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:47 AM
பகிர்:

சென்னையில் போதைப் பொருள் விற்ாக 7 நாள்களில் 17 போ் கைது செய்யப்பட்டனா்.

இது குறித்த விவரம்: சென்னையில் போதைப் பொருள் விற்பனையைத் தடுக்க பெருநகர காவல்துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஆய்வாளா்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினா், கடந்த டிசம்பா் மாதம் முதல் கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனை செய்பவா்களை கண்டறிந்து, கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனா்.

இந்த நிலையில், கடந்த 18-ஆம் தேதியில் இருந்து 24- ஆம் தேதி வரை 7 நாள்களில் போதைப் பொருள் விற்ாக 7 வழக்குகள் பதியப்பட்டு, 17 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களிடமிருந்து 13 கிலோ கஞ்சா, 279 போதை மாத்திரைகள், 80 எல்எஸ்டி ஸ்டாம்புகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னையில் இந்த நடவடிக்கை தொடா்ந்து எடுக்கப்படும். தடை செய்யப்பட்ட போதைப் பொருளை விற்பவா்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →