தமிழ்நாடு

நளினிக்கு பரோல் நீட்டிப்பு

DIN

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினிக்கு மேலும் 30 நாள்கள் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முருகன் வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும், அவர் மனைவி நளினி பெண்கள் சிறையிலும் கடந்த 30 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்கள் உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்யக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. 

இதனிடையே, உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும் தன்னை அருகிலிருந்து கவனித்துக்கொள்ள தன் மகள் நளினியை பரோலில் விடுவிக்க வேண்டும் என்று அவரது தாயார் பத்மா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, நளினிக்கு பரோல் கொடுக்க தமிழக அரசு ஒப்புதல் தெரிவித்தது. 
இதனை தொடர்ந்து நளினி பரோலில் சிறையிலிருந்து வெளியே வந்து காட்பாடி பிரம்மபுரத்தில் தங்கியுள்ளாா். இந்த நிலையில் நளினிக்கு வரும் மார்ச் 28ஆம் தேதி முதல் மேலும் 30 நாள்கள் பரோலை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுட்டுள்ளது. கடந்தாண்டு டிச.27ஆம் தேதி பரோலில் வெளியே வந்த நிலையில் நளினியின் பரோல் 3ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 93 தொகுதிகள் யார் பக்கம்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 15 வரை நீட்டிப்பு!

பங்குச் சந்தையில் ரூ.800 கோடி சரிவைக் கண்ட ரேகா ஜுன்ஜுன்வாலா: தவறானது எங்கே?

முதல்முறை வாக்களித்த மகிழ்ச்சியில்...

SCROLL FOR NEXT