முகப்பு
தமிழ்நாடு

வேலை நிறுத்தம்: மின்வாரிய ஊழியர்களுக்கும் எச்சரிக்கை

தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தைத் தொடர்ந்து வேலை நிறுத்தம் தொடர்பாக மின்வாரியமும் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

Updated On : 25 மார்ச், 2022 at 2:32 PM
பகிர்:

தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தைத் தொடர்ந்து வேலை நிறுத்தம் தொடர்பாக மின்வாரியமும் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

வருகிற மார்ச் 28, 29 தேதிகளில் நாடு முழுவதும் அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அனைத்திந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. 

இதில், தொமுச, சிஐடியு உள்ளிட்ட 11 தொழிற்சங்க கூட்டமைப்பினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.  

Advertisement

இதையடுத்து, போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை விடுத்தது. 'அரசுப் பேருந்துகள், ஆட்டோக்கள் வழக்கம்போல இயங்க வேண்டும், தமிழகத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடக்கூடாது, அன்றைய தினம் யாருக்கும் விடுப்பும் கிடையாது, வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் உள்ளிட்ட  துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதைத்தொடர்ந்து தமிழ்நாடு மின்வாரியமும் தங்கள் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மின்வாரிய ஊழியர்கள் யாரேனும் அன்றைய தினம் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் வழங்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.