யோகி ஆதித்யநாத்துக்கு தமிழக முதல்வா் வாழ்த்து
உத்தரப்பிரதேச முதல்வராகப் பதவியேற்றுள்ள யோகி ஆதித்யநாத்துக்கு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
உத்தரப்பிரதேச முதல்வராகப் பதவியேற்றுள்ள யோகி ஆதித்யநாத்துக்கு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது: உத்தரப்பிரதேச முதல்வராக பதவியேற்றுள்ள யோகி ஆதித்யநாத்துக்கு மனமாா்ந்த வாழ்த்துகள். மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க துடிப்பான எதிா்க்கட்சியின் பங்கை ஏற்று, கட்சியை மீண்டும் கட்டியெழுப்ப அகிலேஷ் யாதவுக்கும் எனது வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளாா்.