தமிழ்நாடு

தமிழகத்தில் 90% அரசுப் பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துத் துறை

DIN

தமிழகத்தில் இன்று 90% அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத்துறை அறிக்கை விடுத்துள்ளது.

நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாள் பொது வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, நேற்று போதிய அளவு பேருந்துகள் இயக்கப்படாததால் மக்கள் அவதிக்கு உள்ளான நிலையில், இன்று கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத் துறை கூறியுள்ளது.

தொழிற்சங்கங்கள் 2-வது நாளாக பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் போக்குவரத்துத் துறை விளக்கம் அளித்துள்ளது.

தமிழகம் முழுவதும் 17,268 அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத் துறை அறிக்கை விடுத்துள்ளது. சென்னையில் 98.02% மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிக்கையில் கூறியுள்ளது. வெளியூர் செல்லும் பேருந்துகள் 61% இயக்கப்படும் என்று விளக்கம் அளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT