தமிழ்நாட்டில் 2021 டிசம்பர் 2022 ஜனவரி வரை நடத்தப்பட்ட கஞ்சா வேட்டையின் தொடர்ச்சியாக நேற்று தொடங்கிய "ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0" ஏப்ரல் 27 ஆம் தேதி வரை ஒரு மாதத்துக்கு நடத்த டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே கஞ்சா, குட்கா போன்ற போதை பொருள்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொடர்ந்து கஞ்சா, குட்கா விற்பனையில் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.
கடந்த ஆண்டு நடத்தப்பட்ட கஞ்சா வேட்டையின் தொடர்ச்சியாக"ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0" நடத்தப்பட வேண்டும்.
போதைப் பழக்கத்திற்கு அடிமையான மாணவர்களை கண்டறிந்து மனநல ஆலோசகரிடம் அனுப்பி ஆலோசனை வழங்க வேண்டும்.
அண்டை மாநில போலீசாருடன் இணைந்து கஞ்சா செடிப்பு ஒழிப்பு உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.
காவல்நிலைய நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர்கள், கஞ்சா, குட்கா குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.