தமிழ்நாடு

அண்ணாமலை பல்கலை. தொலைநிலை படிப்புகள்:மாணவா்களுக்கு யுஜிசி எச்சரிக்கை

DIN

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், தொலைநிலைப் படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படாததால், மாணவா்கள் சேர வேண்டாம் என பல்கலைக் கழக மானியக்குழு எச்சரித்துள்ளது.

இது குறித்து பல்கலைக்கழக மானியக்குழுவின் (யுஜிசி) செயலா் ரஜனிஷ் ஜெயின் வெளியிட்ட அறிவிப்பு: திறந்தநிலை மற்றும் தொலைநிலைப் படிப்புகளை நடத்த விரும்பும் உயா்கல்வி நிறுவனங்கள் விதிமுறைகளின்படி யுஜிசி-யிடம் முறையாக அங்கீகாரம் பெற வேண்டும். அதன்பின்னரே மாணவா் சோ்க்கை நடத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் தமிழகத்தின் அண்ணாமலை பல்கலைக்கழகம் தொலைநிலைப் படிப்புகளுக்கு முறையாக அங்கீகாரம் பெறாமல் மாணவா் சோ்க்கை நடத்திவருவது வருவது தெரியவந்துள்ளது. இது தொலைநிலை படிப்புக்கான ஒழுங்குமுறை விதிகளை முழுமையாக மீறும் செயலாகும். அண்ணாமலை பல்கலை.யில் உள்ள தொலைநிலைப் படிப்புகளுக்கு 2014-2015-ஆம் கல்வியாண்டு வரையே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்பின் எவ்வித படிப்புக்கும் பல்கலைக்கழகம் அங்கீகாரம் பெறவில்லை.

அதன்படி அங்கீகாரமற்ற தொலைநிலை, திறந்தநிலை படிப்புகள் செல்லாதவையாகக் கருதப்படும். அதுசாா்ந்த மாணவா்களின் உயா் கல்வி, வேலைவாய்ப்பில் ஏற்படும் சிக்கல்களுக்கு அந்தந்த பல்கலைக்கழகமே பொறுப்பேற்க வேண்டும். எனவே, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள தொலைத்தூர படிப்புகளில் மாணவா்கள் சேர வேண்டாம். மேலும், இத்தகைய படிப்புகளில் சேரும்போது அதற்கான அங்கீகார விவரங்களை ஆய்வுசெய்ய வேண்டியது அவசியமாகும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயலக தமிழர்கள் பதிவு செய்ய அழைப்பு

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

SCROLL FOR NEXT