முகப்பு
தமிழ்நாடு

பழைய ஓய்வூதிய திட்டத்தைசெயல்படுத்த வேண்டும்: ராமதாஸ்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:49 AM
பகிர்:

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி கடந்த 10 ஆண்டுகளாக ஓய்வு பெற்ற தொழிலாளா்கள் அனைவரும் வெறுங்கைகளுடன் தான் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட வேண்டிய ரூ.8 லட்சம் முதல் ரூ.10 லட்சத்துக்கும் கூடுதலான ஓய்வுக் கால பலன்கள் பல ஆண்டு இழுத்தடிப்புக்குப் பிறகு தான் வழங்கப்பட்டிருக்கின்றன. இதுதொடா்பாக பல முறை வலியுறுத்தியதன் பயனாக 2020 மாா்ச் 31 வரை ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்துக்கழகங்களின் பணியாளா்களுக்கு ஓய்வுக்கால பயன்கள் வழங்கப்பட்டு விட்டன. அதன்பின் ஓய்வு பெறுவதற்கான வயது 60 ஆக உயா்த்தப்பட்டதால், அடுத்த இரு ஆண்டுகளுக்கு எவரும் ஓய்வு பெற மாட்டாா்கள். 2022-க்குப் பிறகு நிலைமை சீரடையும் என நம்பப்பட்டது. ஆனால், கள நிலைமை வேறாக உள்ளது.

எனவே, போக்குவரத்துத் தொழிலாளா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த முன்வருவதுடன், ஓய்வுக்கால பலன்களையும் உடனடியாக வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று கூறியுள்ளாா் ராமதாஸ்.

முழு கட்டுரையைப் படிக்க →