முகப்பு
தமிழ்நாடு

செவ்வாயன்று எட்டு முறை வீசிய சூரிய காந்தப் புயல்

செவ்வாயன்று சூரியனிலிருந்து எட்டு முறை சூரிய காந்தப் புயல்வீசியதாக கொடைக்கானலில் உள்ள வான் இயற்பியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:50 AM
செவ்வாயன்று எட்டு முறை வீசிய சூரிய காந்தப் புயல்
பகிர்:



கொடைக்கானல்: செவ்வாயன்று சூரியனிலிருந்து எட்டு முறை சூரிய காந்தப் புயல் வீசியதாக கொடைக்கானலில் உள்ள வான் இயற்பியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

சூரிய காந்தப் புயல் வீசக் கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், கொடைக்கானல் வான் இயற்பியல் ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானிகள் குழு தீவிர ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

சூரிய காந்தப் புயல் தொடர்பாக, நொடிக்கு நொடி ஆராய்ச்சி செய்ய விஞ்ஞானிகள் குழு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருப்பதாகவும், நேற்று வீசிய சூரிய காந்தப் புயல் மிதமாக இருந்ததாகவும் வரும் நாள்களில் இது மேலும் தீவிரமடையும் என்று கணிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

பூமியை நோக்கி வீசும் சூரிய காந்தப் புயல் காரணமாக செயற்கைக் கோள்கள்,  ஜிபிஎஸ் சாதனங்கள் பாதிக்கப்படக் கூடும் என்று எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

முழு கட்டுரையைப் படிக்க →