முகப்பு
தமிழ்நாடு

2 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்

தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Updated On : 1 மே, 2022 at 3:59 PM
பகிர்:

தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கியது முதல் தென் தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. 

வளிமண்டல கீழடுக்கு மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தெற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் தமிழக மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

எனினும் தமிழகத்தில் ஒருசில இடங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.